அறம் மற்றும் கற்பனைக் கல்வி
1. அறிமுகம்:
கல்லூரி பாடத்தை தாண்டி வெளி உலகையும், புதிய அறிதல்களையும் மாணவர்கள் பெற வேண்டும் என
2023 ஆம் ஆண்டு இந்த கல்வித் திட்டம் உருவாக்கப்பட்டது. பாடத்திட்டத்தில் உள்ள விடுபடல்களை கண்டறிந்து அதை நிரப்பும் வகையில் இதை உருவாக்கப் பட்டுள்ளது. ஒரு வழக்கறிஞர், இரு கல்லூரி பேராசிரியர்கள் இணைந்து ஏற்கனவே உள்ள பாட திட்டத்தினை ஆராய்ந்து இதை உருவாக்கி உள்ளார்கள். இந்த கல்வியின் பாடத்திட்டம் பெரும்பாலும் புத்தகங்கள் அறிமுகம், இலக்கியம், வரலாறு, வாழ்க்கைச் சம்பவங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அமையும். பத்து வெவ்வேறு ஆளுமைகள் இந்த வகுப்புகளை நடத்துவார்கள். வகுப்புக்கு வெளியேவும் மாணவர்களை அழைத்துச் சென்று அவர்கள் அனுபவத்துக்கு உள்ளாக்கப்படுவார்கள். இந்த கல்வித் தொடர் இரண்டு பகுதிகள் கொண்டது ஒன்று அறக் கல்வி மற்றொன்று கற்பனைக் கல்வி. ஒரே மாணவர் அல்லது மாணவி இந்த இரண்டு பகுதிகளையும் முடிக்க வேண்டும். ஒவ்வொரு பகுதியும் சுமார் 3 மாதங்கள் கொண்டது. ஒரு செய்முறையும் உண்டு. ஒவ்வொரு பகுதியிலும் மாணவர்கள் சுமார் 200 பக்க அளவில் பாடங்களை படிக்க வேண்டும். இரண்டு பகுதியும் தலா 10 நாட்கள், 45 மணி நேரங்கள் வகுப்புகள் கொண்டது. இதன் பின் தகுதியுடைய மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் .
2. அறக் கல்வி ஆசிரியர்கள்:
1. சுனில் கிருஷ்ணன் (எழுத்தாளர், காரைக்கால். )
2. அனிஷ் கிருஷ்ணன் நாயர் (கல்லூரி ஆசிரியர், நாகர்கோயில்.)
3. ஜெயமோகன் (எழுத்தாளர், நாகர்கோயில்.)
4. லோகமாதேவி (கல்லூரி பேராசிரியசர், பொள்ளாச்சி. )
5. ஜெகன் (மருத்துவர், ஓசூர். )
6. சிவராஜ் (குக்கூ காட்டுப்பள்ளி, திருவண்ணாமலை.)
7. அன்புராஜ் (அந்தியூர். )
8. வி.பி. குணசேகரன் (அந்தியூர். )
3. கற்பனைக் கல்வி ஆசிரியர்கள்
1. சுனில் கிருஷ்ணன் (எழுத்தாளர், காரைக்கால். )
2. அனிஷ் கிருஷ்ணன் நாயர் (கல்லூரி ஆசிரியர், நாகர்கோயில்.)
3. ஜெயமோகன் (எழுத்தாளர், நாகர்கோயில்.)
4. ராஜகோபாலன் (சென்னை)
5. சாம்ராஜ் (கவிஞர், மதுரை)
6. ஏ.வி. மணிகண்டன் (பெங்களூரு)
4. மாணவர் தேர்வு செய்தல்:
இந்த வகுப்புகளுக்கு மாணவர்கள் பல்வேறு கல்லூரிகளில் இருந்து இரண்டு கட்ட நுழைவு தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள், தேர்வின் முதல் கட்டமாக சரியான விடைகளை தேர்ந்தெடுத்தல் வடிவில் அமைந்திருக்கும், இந்த தேர்வில் 45 கேள்விகள் உள்ளது. அதில் ஒரு பத்தியை படித்து அதிலிருந்து விடை எழுதுதல் போன்ற கேள்விகளும் உள்ளடங்கும். இந்த கேள்விகள் அனைத்தும் வரலாற்று நிகழ்வுகள், அறிவியல், சமுதாயம், இலக்கியம் ஆகியவற்றை குறித்து கேட்கப்படும். முதல் கட்ட தேர்வில் தகுதி பெற்ற மாணவர்களுக்கு இரண்டாவது கட்டமாக எழுத்து முறை தேர்வு நடத்தப்படும். இதில் அமையும் கேள்விகள் மாணவர்களின் அற நிலைப்பாடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் வகையில் அமையும். இந்த இரண்டாவது கட்ட தேர்வின் முடிவுகளே இறுதியான முடிவாக அமைகிறது. இந்த இரண்டாவது கட்ட தேர்வில் ஓரளவு அறநிலைப்பாடு எடுக்கும் மாணவர்கள் மட்டுமே இந்த கல்வி திட்டத்தில் இணைய முடியும்.
இந்த மாற்றுக் கல்வி திட்டத்தில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு தற்போது ஒரு வகுப்பிற்கு தலா ரூ.500 ஊக்கத் தொகையாகவும், வகுப்பு நாட்களில் அவர்களுக்கு மதிய உணவு, தேநீர், ஆகியவற்றை இலவசமாகவும் கொடுத்து வருகிறோம். இந்த மாற்றுக் கல்வியை பயிலும் மாணவர்களை சில குறிப்பிடத்தக்க வரலாற்று நினைவுச் சின்னங்கள், சில வரலாற்று ஆய்வுகள் செய்யப்படும் இடங்கள், காந்திய நினைவிடங்கள் போன்றவற்றை பார்வையிட அழைத்து செல்கிறோம். இந்த மாற்றுக் கல்வி திட்டத்தில் முழுமையாக பங்கெடுத்து நிறைவு செய்யும் மாணவர்களுக்கு இந்த திட்டத்திற்கு நிதி உதவி செய்யும் நிறுவனங்களில் நேரடியாக வேலைவாய்ப்பையும் பெற நடவடிக்கை எடுத்துள்ளோம். இது தவிர மாணவர்கள் சுய தொழில் செய்வதற்கு சரியான திட்டம் வைத்திருந்தால் அதற்கு உதவி செய்வதாக திட்டமிட்டுள்ளோம்.
5. தற்போதைய நிலை:
ஈரோடு மாவட்டத்தில் பிப்ரவரி 2023 இல் தொடங்கப்பட்ட இந்த மாற்றுக் கல்வித் திட்டமானது
ஆகஸ்ட் 2023 இல் விரிவுபடுத்தப்பட்டு ஈரோட்டில் இன்னொரு தொகுதியும் திருப்பூரில் ஒரு தொகுதியும் தொடங்கப்பட்டது. ஈரோடு, திருப்பூர் இரண்டு மாவட்டங்களையும் சேர்த்து தற்போது மொத்தம் 47 மாணவர்கள் இந்த அறம் மற்றும் கற்பனைக் கல்வி தொடரை முடித்து உள்ளார்கள். இந்த மாற்றுக்கல்வித் தொடரை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ள 47 மாணவர்களுக்கும் 2024 செப்டெம்பர் 15 ஆம் தேதி எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்கள் பங்கேற்ப்புச் சான்றிதழ்கள் வழங்க உள்ளார். இந்த 47 மாணவர்களில் 4 பேருக்கு சிறப்பாக பங்கேற்றதை பாராட்டும் பொருட்டு சிறப்புச் சான்றிதழும் வழங்க உள்ளோம். தற்போது ஆகஸ்ட் 2024 முதல் ஈரோட்டில் மூன்றாவது தொகுதியும் திருப்பூரில் இரண்டாவது தொகுதியும் தொடங்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. ஈரோட்டில் 22 மாணவர்களும் திருப்பூரில் 29 மாணவர்களும் தற்போது பயின்று வருகின்றனர்.
6. மாணவர் மறுமதிப்பீடு:
ஈரோடு மாவட்டத்தில் ஏப்ரல் 2023 இணைந்த முதல் பருவ மாணவர்களை பொறுத்தவரை அவர்கள் வகுப்புகளுக்கு வரும் முன்பு இருந்ததைவிடவும் தற்போது அவர்களது புத்தகங்கள் வாசிக்கும் திறன் மேம்படுத்த பட்டுள்ளது, அவர்கள் தன்னார்வம் மிக்க மாணவர்களாகவும், குழுவாக ஒருங்கிணைத்து பணிகளை முடிப்பதையும் உணர்கிறோம். மாணவர்களின் முடிவெடுக்கும் திறன், அற சிக்கல்களை கையாளுதல், புதிய அனுபவங்களை திரட்டுதல், புத்தகங்களை பற்றிய விவாதங்களையும் அதில் உள்ள சில அற சிக்கல் மிகுந்த கேள்விகளை எழுப்புதல் போன்றவற்றை அறக் கல்வி வகுப்புகள் துவங்கிய சில நாட்களிலேயே கண்டோம். மேலும் அவர்கள் சமுதாயத்தில் உள்ள குழந்தை திருமணம், விவாகரத்து, தற்கொலை, போன்றவற்றை பற்றிய கள ஆய்வுகளை மேற்கொண்டு அதன் அறிக்கைகளும் சமர்பித்துள்ளார்கள்.
விஷ்ணுபுரம் அலுவலகம்,
கண்ணகி வீதி,
ஆசிரியர் காலனி,
டாக்டர், ராதாகிருஷ்ணன் சாலை,
ஈரோடு.
https://maps.app.goo.gl/SNk8PwRa2VsmPEpG6
கிருஷ்ணன்,
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம், ஈரோடு.
98659 16970.
Last updated: 05.10.24
Comments
Post a Comment