தொல்லியல் பயணம்
தொல்லியல் பயணம் -ஹேமலதா, இளங்கலை அரசியல் அறிவியல், ஈரோடு கலை கல்லூரி தேதி : 20.9.2026 நிகழ்வு: ஒரு நாள் பயணம் - பறவை பார்த்தல் மற்றும் தொல்லியல் பயணம். இடங்கள்: 1. வெள்ளோடு 2. பவணந்தி முனிவர் வாழ்ந்த இடம் 3. குமரிக்கல்பாளையம் 4. அகழ்வாராய்ச்சி 5. விஜயமங்கலம் சமணர் கோவில் 6. கொடுமணல் 7. சர்க்கார் பெரியபாளையம் கோவில் ஆசிரியர்கள்: திரு. கொங்கு சதாசிவம், திரு. ஈஸ்வர மூர்த்தி. பயணம் பற்றி “வெள்ளோட்டில் வானில் சிறகடித்த பறவைகளையும், மண்ணுக்குள் புதைந்திருந்த வரலாற்றின் தடங்களையும் தேடிச் சென்ற இப்பயணம், இயற்கையையும், தொல்லியலையும் ஒரே நாளில் அறிந்துகொள்ளச் செய்த மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.” என் அனுபவம் பயணப் பேருந்து ஈரோடு பேருந்து நிலையம் வந்தது. ஈரோடு மாணவர்களை ஏற்றிக்கொண்டு பெருந்துறை பேருந்து நிலையம் நோக்கி புறப்பட்டத...