Posts

Showing posts from June, 2023

கர்நாடக கலைப் பயணம் – சுஜிதா

Image
  கர்நாடக கலைப் பயணம் – சுஜிதா 2026 ஆகஸ்ட் 20 முதல் 22  வரை கர்நாடகத்தின் வரலாற்றுச் சுவடுகளை தாங்கி நிற்கும் ஹொய்சாலர் கலைக்கட்டிடங்களை காணும் நோக்கில் , நாங்கள் ஏழு பேர் எங்கள் பயணத்தை தொடங்கினோம். 10.30 மணிக்கு இரவு ஈரோட்டிலிருந்து மைசூர் செல்லும் பேருந்தில் எங்கள் பயணம் ஆரம்பித்தது. போகின்ற வழியில் இருள் சூழ்ந்தது. நகரத்தின் வெளிச்சம் நீங்கி , மலைமேல் ஏறும் போது இரவுக்கே உரித்தான இருள் எங்களை கொஞ்சம் கொஞ்சமாக வரவேற்றது. வழியில் பாறைகளை   பார்த்தோம். பின்பு காலை 5:00 மணிபோல் மைசூர் பேருந்து நிலையத்தை அடைந்தோம்.பின்பு அங்குள்ள ஒரு கட்டணக் கழிப்பிடத்தில் உடலை சுத்திப்படுத்திக் கொண்டு எங்கள் திட்டத்தின் முதல் இடமான லஷ்மிநாராயணர் கோவிலை நோக்கி சென்று கொண்டிருந்தோம்.     மைசூரிலிருந்து   சென்று கொண்டிருக்கும் பொழுது    ஜன்னலோரமாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். அந்த வழியில் , அசோகா சாலையில் உள்ள புனித் பிலோமினா தேவாலயத்தின் கட்டிட தோற்றம் எங்கள் கண்களை கவர்ந்தது. நாங்கள் அதன் அழகைக் காண எங்கள் டெம்போவை நிறுத்திவிட்டு ஆலயத்தைப் பார்த்துச...